கேரளாவில் 11ம் வகுப்பு தேர்வுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம்

கேரளாவில் கொரோனா தொற்று குறையவில்லை. நாடு முழுவதும் பதிவாகும் மொத்த பாதிப்புகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்பு கேரளாவில் பதிவாகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாகவே உள்ளது. பாதிப்பு விகிதம் 18.41 சதவீதம். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் வரும் 6ம் தேதி முதல் 11ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வை நேரடியாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசின் முடிவில் தலையிடக் கூடாது என்ற கேரள உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 11ம் வகுப்பு தேர்வை நேரடியாக நடத்தும் அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், தேர்வை ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கும்படி உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 13ம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘நான் கேரளாவின் தலைமை நீதிபதியாக இருந்தேன். சிறந்த மருத்துவ உள்கட்டமைப்புகள் கொண்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. இருந்தபோதிலும், கேரளாவால் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை’ என நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் தெரிவித்தார்,

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools