கேரளாவில் முக்கிய பண்டிகை நாட்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும். இதனால் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.
மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் குறித்து வருவாய் துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் மட்டும் கேரளா முழுவதும் ரூ.18,500 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இதில் அரசு மதுபான விற்பனை நிலையங்கள் மூலம் மட்டும் ரூ.16,100 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மது பிரியர்கள் மூலம் அதிகளவில் ரம் விற்பனை ஆகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிராந்தி விற்பனை ஆகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் பீர் விற்பனையும் அதிகரித்துள்ளது, என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.