X

கேரளாவில் அரசு பேருந்து, பள்ளி சுற்றுலா வாகனம் மோதி விபத்து – 9 பேர் உயிரிழப்பு

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும்,38 பேர் காயமடைந்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு உதகைக்கு சுற்றுலா சென்றது. அப்போது கோவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மாணவர்கள் என்றும் 4 பேர் அரசு பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

படுகாயமடைந்த 38 பேருக்கு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.