கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 4,459 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4459 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் தென்மாவட்டங்களில் மட்டும் 2993 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களில் நேற்று மட்டும் 17 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் பொது இடங்களுக்கு செல்லும்போது மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

கேரளா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools