Tamilசினிமா

கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது – நடிகர் ஆர்யா

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஆர்யா நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன்’. டெடி திரைப்படத்திற்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி மீண்டும் இணைந்து செயல்படுவதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ‘கேப்டன்’ திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம், நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. “கேப்டன்” திரைப்படம் செப்டம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நெல்லை வந்த நடிகர் ஆர்யா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “கேப்டன் திரைப்படம் ஹாலிவுட்டுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் பல காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்கில படத்திற்கு இணையாக இந்த படம் உருவாகியுள்ளது. இது தற்போது தமிழகத்தில் புது முயற்சியாக இருக்கும்.

சிறுவர்களை அதிகமாக கவரக்கூடிய படமாகவும் இருக்கும். அதிக பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. காடுகளில் அதிக அதிக நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரைத்துறை பாதுகாப்பான சூழ்நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் திரையரங்குகளில் காட்சிகள் மிக குறைவாக இருந்தது. ஆனால் தற்போது காட்சிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக 100 நாட்கள் கிடைக்கும் வசூல் இரண்டு நாட்களிலேயே கிடைத்து விடுகிறது இவ்வாறு அவர் கூறினார்.