Tamilவிளையாட்டு

கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள் – பும்ரா

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பும்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் எல்லா முடிவுகளிலும் ஈடுபடுவதை நான் மிகவும் விரும்பினேன். கேப்டன்ஷிப் வாய்ப்பு கிடைத்தால் யார்தான் செய்ய மாட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

என்று பும்ரா கூறியுள்ளார்.

மார்ச் 2022-ல் திட்டமிடப்பட்ட எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் பும்ரா இந்தியாவின் கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.