கேப்டனாக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் – 2வது இடத்தில் டோனி
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி 8 பந்தில் 21 ரன் எடுத்தார். இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியில் அவர் 6 ஆயிரம் ரன்னை எடுத்து சாதனை புரிந்தார். விராட்கோலிக்கு அடுத்தபடியாக டோனி 6 ஆயிரம் ரன்னை கேப்டன் பதவியில் எடுத்தார். விராட் கோலி கேப்டன் பதவியில் 6,451 ரன் எடுத்துள்ளார். ரோகித் சர்மா 4764 ரன்னுடன் 3வது இடத்தில் உள்ளார்.
மேலும் 20 ஓவர் போட்டிகளில் 200 கேட்ச் பிடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் டோனி படைத்தார். ஷர்துல் தாகூரின் கேட்சை பிடித்ததன் மூலம் இந்த மைல்கல்லை தொட்டார். தினேஷ் கார்த்திக் 182 கேட்ச்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.