கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

பிரதமர் மோடி இன்று காலை கேதார்நாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் அருகே ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் (ஆதி சங்கரர்) புனரமைக்கப்பட்ட சமாதி ஸ்தலத்தில் நிறுவப்பட்டுள்ள 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் அங்கு சிறிது நேரம் தியானம் செய்தார்.

உத்தரகாண்டில் 2013ம் ஆண்டு  ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது கேதார்நாத் கோவில் சேதமடைந்தது. கோவில் அருகே உள்ள ஆதி சங்கரர் சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆதிசங்கரர் சமாதியும் பாதிக்கப்பட்டது. தற்போது கோவில் மற்றும் சமாதி புனரமைக்கப்பட்டு வருகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools