கேகோ இந்தியா விளையாட்டு போட்டி – கபடியில் கோட்டா பல்கலைக்கழகம் தங்கப்பதக்கம் வென்றது
பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் பிரிவு கபடி போட்டி ஆட்டத்தில் கோட்டா பல்கலைக்கழகம் அணி சவுத்ரி பன்சி லால் பல்கலைக்கழக அணியை எதிர்கொண்டது.
இதில் 15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கோட்டா பல்கலைக்கழகம் அணி தங்கம் வென்றது.
போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோட்டா பல்கலைக்கழக கேப்டன் ஆசிஷ், முதல் பாதியில் நாங்கள் அனைவரும் சற்று பதட்டமாக இருந்தோம் என்றும், இரண்டாம் பாதியில் பயிற்சியாளர் அறிவுரையின்படி செயல்பட்டதால் தங்கம் வெல்ல முடிந்தது என்றார்.
மகளிர் பிரிவில் மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை வீழ்த்தி, குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம் வெற்றி பெற்றது.
இந்த போட்டிகளை கண்டு ரசித்த மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், பல்கலைக்கழக இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற அணியை சேர்ந்த 2 வீரர்களை புரோ கபடி லீகில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.