இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் டோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.
இந்த நிலையில் டோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய முன்னாள் வீரர் டோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும். 331 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய டோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்ற கேப்டன் கூல் டோனியின் பெயர் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.