தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்ற கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் விவசாயிகளின் நகைக்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.