கூட்டணிக்காக திமுக-வை பிரதமர் மோடி அழைக்கவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்தார். இதனால் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என்றும், பிரதமர் மோடி, வாஜ்பாயும் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த தமிழிசை சவுந்தரராஜன், ‘கூட்டணிக்கு திமுகவை பிரதமர் மோடி அழைக்கவில்லை’ என்றார்.
“தமிழகத்தில் கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று மோடி கூறியது திமுகவுக்கு அல்ல. வாஜ்பாய் பாணியில் கூட்டணி என்பதை திமுகவுக்கு விடுத்த அழைப்பாக ஸ்டாலின் ஏன் எடுத்துக்கொண்டார்?” என்றும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்ததால் பாராளுமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக தென் மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியில் பாஜக கூட்டணி அமைக்கும் என்றும், பழைய நண்பர்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார். எனவே, இதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாஜகவுடன் ஒருபோதும் திமுக கூட்டணி வைக்காது என அறிவித்துள்ளார். பிரதமர் மோடி வாஜ்பாயும் அல்ல என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கட்சி நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன்தான் அதிமுக கூட்டணி வைக்கும் என கூறினார்.
1999-ல் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் தி.மு.க. அங்கம் வகித்தது குறிப்பிடத்தக்கது.