கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு அருகே 2 ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை

மண்ணிவாக்கம் ரமேஷ், ஓட்டேரி சோட்டா வினோத் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஓட்டேரி, வண்டலூர், கூடுவாஞ்சேரி காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

10 நாட்களுக்கு முன்னதாக திமுக பிரமுகரை வெட்டிக்கொலை செய்ய முயற்சி செய்ததுடன், தப்பி ஓடியுள்ளனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரவாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை கூடுவாஞ்சேரி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார் கீரப்பாக்கம்- காரணை புதுச்சேரி பிரதான சாலையில் வாகன சோதனையைில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ரமேஷ், சோட்டா ஆகியோர் காரில் வேகமாக வந்துள்ளனர்.

உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் அவர்கள் வந்த காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். அப்போது போலீஸ் வாகனம் மீது ரவுடிகள் வந்த கார் பயங்கரமாக மோதி நின்றன. இதில் சிவகுருநாதன் லேசான காயம் அடைந்துள்ளார். ரவுடிகள் இருவரும் காரில் இருந்து இறங்கி காட்டிற்குள் ஓடியுள்ளனர். அப்போது போலீசார் அவர்களை பிடிக்க முயற்சி செய்துள்ளனர்.

ரடிவுகள் இருவரும் உதவி ஆய்வாளர் சிவகுருநாதனை கத்தியால் வெட்டியுள்ளனர். இதில் சிவகுருநாதன் காயம் அடைந்துள்ளார். உடனே, ஆய்வாளர் முருகேசன், ரவுடிகள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்துள்ளதாக தெரிகிறது.

உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரவுடி சோட்டா வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news