கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல்! – பிரியா வாரியர் முதலிடம்

கூகுளில் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் எது தேடப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிட்டு வருகிறது.

2018-ம் ஆண்டு அதிகம் தேடப்பட்டவை பட்டியலை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளது. அதில் விளையாட்டு குறித்த தேடல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சினிமா மற்றும் கிரிக்கெட்டைப் பின்னுக்கு தள்ளி பிபா 2018 உலகக்கோப்பைக் கால்பந்து அதிக தேடல்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.

பிபா உலகக்கோப்பை 2018, லைவ் ஸ்கோர், ஐபிஎல் 2018 ஆகியவை டாப் 3 டிரெண்டிங்காக தேடலில் இருந்துள்ளது. அதேபோல் சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் 2.0 படம் அதிகம் கூகுளில் தேடப்பட்ட திரைப்படமாக விளங்குகிறது. அதிகம் தேடப்பட்ட பிரபலங்களில் மலையாள படத்தில் கண் சிமிட்டி புகழ்பெற்ற இளம் நடிகை பிரியா வாரியர் இடம் பிடித்துள்ளார்.

இந்தியத் திரைப்படங்களில் 2.0 படம் முதல் இடம் பிடித்துள்ளது. இந்தி திரைப்படங்களில் பாகி-2, ரேஸ்-3, டைகர் ஜிந்தா ஹை, சஞ்சு ஆகியவை அதிகம் கூகுள் செய்யப்பட்டுள்ளன. ‘அவெஞ்சர்ஸ்: இன் பினிட்டி வார்’ இந்தியர்களால் அதிகம் கூகுள் செய்யப்பட்ட ஹாலிவுட் திரைப்படமாகும்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஜோடியான பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் டாப் 5 டிரெண்டிங் பட்டியலில் உள்ளது. அதேபோல் திருமணங்களில் இந்திய மக்களைக் கவர்ந்தது பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனாஸ் திருமணம், தீபிகா படுகோனே திருமணம், சோனம் கபூர் திருமணம், ஆகியவை 2018-ல் டாப் டிரெண்டிங் செய்திகளில் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools