குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்வது என் உரிமை – சமந்தா காட்டம்

நடிகை சமந்தா முதன்முறையாக இணைய தொடர் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- “இணைய தொடர்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சினிமாவில் மட்டுமன்றி எல்லா துறைகளிலும் ஆண், பெண் வித்தியாசம் ஒழிய வேண்டும்.

திருமணம் ஆனதில் இருந்து குழந்தை எப்போது என்று என்னை சந்திக்கிறவர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். இதில் தவறு இல்லை. குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது.

இன்றைய தலைமுறையினர் பிடித்ததை செய்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது பெற்றுக்கொள்வேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools