X

குழந்தைகளை நாடகத்தில் ஈடுபடுத்துங்கள் – நடிகர் நாசர் பேச்சு

புதுவை வெளிப்படை அரங்க இயக்கம் சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராம திடலில் அரங்கல் திருவிழா 2 நாட்கள் நடக்கிறது. பாரதிதாசனின் இரணியன் அல்லது இணைய வீரன் என்ற நாடகம் நடந்தது. தென்னிந்திய நடிகர்கள் சங்க தலைவர் நாசர், திரைப்பட மற்றும் நாடக கலைஞர் பேராசிரியர் ராமசாமி, இயக்குனர் வேலு பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களை பறையாட்டம், தேவராட்டத்துடன் கலைஞர்கள் வரவேற்றனர். நாடக கலைஞர்களை நடிகர் நாசர் பாராட்டி பரிசு அளித்து பேசியதாவது, சிறப்பு திரைப்படம், சிறப்பு சீரியல், ஓ.டி.டி. என அனைத்தையும் விட்டு விட்டு நாடகம் பார்க்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். சென்ற நூற்றாண்டு வரை நேரடியாக கதை சொல்லும் வழக்கம் இருந்தது.

நேரடியாக கதையை சொல்லும் போது நமது மூளைக்கு சென்றடையும் கருத்து யார் நல்லவன்.? யார் கெட்டவன்.? என்று தெரிந்துவிடும். பெற்றோர்கள் இதுபோன்ற நவீன நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு நவீன நாடகம் பற்றி தெரிவிக்க வேண்டும். அனைத்து நாகரீகங்களிலும் மனிதனின் வெளிப்பாடாக நாடகம் இருக்கிறது. நவீன நாடகங்களுக்கு குழந்தைகளை பெற்றோர் பழக்கப்படுத்த வேண்டும். இங்கு ஒரு நாடகம் நடந்தாலும் 200 பேர் பார்க்கிறீர்கள்.

200 நாடகமாக மனதிற்குள் போகிறது. காரணம் இந்த நாடகத்தை அவரவர் வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்கள். புதிய சிந்தனைகள் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கலைகள் உருவாகி அடுத்த சந்ததிக்கு செல்கிறது. இந்த நவீன உலகத்திற்கு அடுத்த சந்ததியினருக்கு விட்டு செல்லக் கூடியது நவீன நாடகம். இதனால் குழந்தைகளை நாடகத்தில் ஈடுபடுத்துங்கள். புதுவையில் சிறந்த நாடக பள்ளி இயங்குகிறது.

இவ்வாறு நாசர் பேசினார்.

Tags: tamil cinema