Tamilசெய்திகள்

குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை – பயிற்சி டாக்டரிடம் விசாரணை நடத்தும் தனிப்படை

கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த பயிற்சி டாக்டர் சுஜிர்தா கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி டாக்டரின் தந்தை தூத்துக்குடி வியாபாரி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் 3 டாக்டர்களின் பெயர்களை எழுதி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முதலில் கல்லூரியின் போராசிரியர் டாக்டர் பரமசிவம், பாலியல் தொந்தரவு செய்து உடல் ரீதியாகவும் மண ரீதியாகவும் தொந்தரவு செய்தாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் ஷரிஷ், பிரித்தி ஆகியோரும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தக்கலை துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் கடந்த 3 நாட்களாக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சுஜிர்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் புகார் கூறப்பட்டுள்ள பயிற்சி டாக்டர் ஹரிஸ், இங்கு இல்லை என்பதும் அவர் தனது சொந்த ஊரான சென்னையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் பிரித்தி ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி நியமிக்கப்படுள்ளார். அவர் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறை அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகிறார்.

செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார் மேலும் கல்லூரி மாணவி தற்கொலை சம்பந்தமாக யாராவது தகவல் தெரிவிக்க விரும்பினால் 9498195077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.