ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக வர்த்தகம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.