‘குருதி ஆட்டம்’ படத்தின் கதாப்பாத்திரங்களை வெளியிட்ட படக்குழு
‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஸ்ரீ கணேஷ். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்’. இந்த படத்தில் அதர்வாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
அதன்படி சேது என்ற கதாபாத்திரத்தில் வத்சன் சக்ரவர்த்தியும் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் கண்ணா ரவியும் நடித்திருக்கின்றனர். இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.