வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் குருணால் பாண்டியா சிறப்பாக விளையாடினார். மூன்று விக்கெட்டுக்களுடன் 67 ரன்கள் சேர்த்த அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் குருணால் பாண்டியாவுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று லஷ்மண் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து லஷ்மண் கூறுகையில் ‘‘50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு அதிக அளவில் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஏனென்றால், முழுமையாக 10 ஓவர்கள் வீசுவதுடன் 6-வது களமிறங்கி சிறப்பாக பேட்டிங்கும் செய்ய முடியும்.
இளம் வீரர்களான நவ்தீப் சைனி, குருணால் பாண்டியா, தீபக் சாஹர் ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. சைனி மிகவும் சிறப்பாக பந்து வீசினார்’’ என்றார்.