குருகிராம் நகரின் பயங்கர தீ! – போலீசார் விசாரணை

ஹரியானா மாநிலம் குருகிராம் நகரம் மானேசரிர் பகுதி செக்டர் 6ல் உள்ள குப்பை கிடங்கில் நேற்று இரவு தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. முழுவதும் குப்பை என்பதால் தீ மளமளவென பரவி,
காட்டுத்தீப்போல் கொழுந்துவிட்டு எரிகிறது.

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்து இதுகுறித்து உடனடியாக போலீசில் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் 35 வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

இந்நிலையில், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools