X

கும்ப்ளே, ஹர்பஜன் சாதனையை முறியடித்த அஸ்வின்

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் டிரினிடாட்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார். 2-வது இன்னிங்சில் இதுவரை வீழ்ந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

கபில்தேவ் 89 விக்கெட்டுகளுடன் முதல் இடம் பிடித்துள்ளார். அஸ்வின் 75 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அனில் கும்ப்ளே 956 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்வின் 712 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

ஹர்பஜன் 711 விக்கெட்டுகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். கபில்தேவ் 687 விக்கெட்டுகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

Tags: tamil sports