Tamilசெய்திகள்

குமரி அனந்தன் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமம் லோகையா காலனியில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது.

குமரி அனந்தன் உடலுக்கு தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

குமரி அனந்தன் உடலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

மேலும் குமரி அனந்தனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாட்டின் முன்னேற்றம், சமூகத்திற்கு ஆற்றிய பணிக்காக குமரி அனந்தன் நினைவுகூரப்படுவார். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்த குமரி அனந்தன் பல முயற்சிகளை மேற்கொண்டார்.

குமரி அனந்தன் மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.