X

குடும்ப பிரச்சனையால் துப்பாக்கி சூடு நடத்திய அமெரிக்க வாலிபர் – 11 பேர் பலி

தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு மொண்டெனேகுரோ. அந்நாட்டின் மெடொவினா நகரில் இன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 34 வயதான நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடத்தினார். தெருவில் நடந்து சென்றவர்கள், கண்ணில் பட்டவர்கள் என அனைவரையும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். ஆனால், அந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.

விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரிய வந்தது. இந்த துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? தாக்குதலுக்கான காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.