பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சிகளை வாரிசு அரசியல் என விமர்சனம் செய்வது உண்டு. குறிப்பாக லாலு பிரசாத், திமுக-விற்கு எதிராக இந்தவிமர்சனத்தை வைப்பது உண்டு. இந்த நிலையில்தான் லாலு பிரசாத், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என விமர்சனம் செய்தார். ஆனால் ஒட்டு மொத்த தேசம்தான் என்னுடைய குடும்பம் என பிரதமர் மோடி பதில் கொடுத்தார்.
இந்த நிலையில் இன்று தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:-
என்னோடு சித்தாந்தத்தில் வேறுபட்டுள்ளதாக அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சொல்கிறார்கள். முதலில் குடும்பம் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் நான் முதலில் தேசம்தான் என்று நம்புகிறேன். அவர்களுக்கு அவர்களுடைய குடும்பம்தான் எல்லாமே. என்னை பொறுத்தவரையில் என்னுடைய நாடுதான் எனக்கு எல்லாமே. அவர்களுடைய குடும்ப நலனுக்காக அவர்கள் நாட்டை தியாகம் செய்கிறார்கள். நாட்டின் நலனுக்கான நான் என்னையே தியாகம் செய்துள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.