X

குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்ட நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் ராயன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிரச் செய்துள்ளது. அவரின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ்

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஜூலை 16 ஆம் தேதி படத்தின் அதிரடியான டிரைலர் வெளியானது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படம் ஜூலை மாதம் 26-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு A சான்றிதழை அளித்துள்ளனர்.

இந்நிலையில் ‘ராயன்’ திரைப்படம் வரும் 26ம் தேதி வெளியாவதை ஒட்டி, ஆண்டிப்பட்டியில் உள்ள குலதெய்வ கோயிலில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்துடன் நேற்று சாமி தரிசனம் செய்தார்.