குடியுரிமை திருத்த மாசோதாவுக்கு மாநிலங்களவையில் சிவசேனா எதிர்ப்பு!

பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய சிவசேனா கட்சி, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் ஓட்டு போட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.

மசோதா மீது அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் பேசும்போது, “இந்த மசோதாவை நாம் மதத்தின் அடிப்படையில் விவாதிக்காமல் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும். ஊடுருவியவர்களுக்கும், அகதிகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு” என்று கூறினார்.

தீவிரமான இந்து கட்சி, தேசபக்தி கொண்ட கட்சி என்பதை சிவசேனா கட்சி நிரூபிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், “ஊடுருவியவர்களை நாட்டை விட்டு தூக்கி எறிவோம் என்பது அமித் ஷா அளித்த உறுதி, அதுதான் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த மசோதாவின்படி குடியுரிமை வழங்குகிறபோது ஓட்டு வங்கி அரசியல் கூடாது” எனவும் சஞ்சய் ராவுத் வலியுறுத்தினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools