குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆர்பாட்டம்!
இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த போராட்டத்தின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது போராட்டக்காரர்கள், பொது சொத்துக்களை சேதப்படுத்தினர். வன்முறை சம்பவங்களில் பலர் பலியாகி உள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்தில் உள்ள அம்சங்களை விளக்கியும் ஆளுங்கட்சியான பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்கள் ஒன்றுகூடி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியிருந்தனர்.