குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் வீட்டு வாசலில் கோலம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் கோலம் வரைந்து இந்த சட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சிஐடி நகரில் உள்ள திமுக எம்பி கனிமொழியின் வீட்டு வாசலில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் வரையப்பட்டிருந்தது.

கோலம் வரைந்து, அதன் அருகில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தன.

இதேபோல் திமுக மகளிரணியினர் பல்வேறு பகுதிகளில் ரங்கோலி வரைந்து, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களை எழுதியிருந்தனர்.

சென்னை பெசன்ட்நகர் பகுதியில் நேற்று மாணவிகள் சிலர் கோலம் வரைந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news