குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வழக்குகள்! – உச்ச நீதிமன்றத்தில் 18 ஆம் தேதி விசாரணை தொடக்கம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் தனித்தன்மைக்கு முரணாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கு எதிராக திரிபுரா முன்னாள் மகாராஜா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்துள்ளனர்.

கடந்த 13-ம் தேதி தனிப்பட்ட முறையில் இந்த வழக்கை தொடர்ந்துள்ள ஜெய்ராம் ரமேஷ் தனது மனுவில், ‘விரைந்து நிறைவேற்றப்பட்ட இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக அவசர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இதுதொடர்பாக அவசர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் மதிப்புக்குரிய நீதிமன்றத்தை நாடியுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து 18-ம் தேதி (புதன்கிழமை) விசாரிக்க நீதிபதிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதேபோல், திரிபுரா முன்னாள் (மற்றும் கடைசி) மன்னரின் மகன் கிரிட் பிரட்யோட் டேப் பார்மன் மற்றும் சிலர் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளும் 18-ம் தேதி விசாரிக்கப்படுகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools