குடியரசு தின விழா – டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கை கடுமையாக்கப்பட்டது

வரும் 26ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் புதுடெல்லியில்  முப்படைகளின் அணிவகுப்பு உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.   இந்நிலையில் காஜிப்பூர் மலர் சந்தையில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து,  டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு, முக அடையாளம் காணும் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

இது தொடர்பாக புது தில்லி காவல்துறை அதிகாரி தீபக் யாதவ் தெரிவித்துள்ளதாவது:

பயங்கரவாத அச்சுறுத்தல் தவிர, கொரோனா பரவலுக்கும் பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் படையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. புது தில்லி பகுதியிலும் அதைச் சுற்றியுள்ள ஹோட்டல்களில் தங்கியிருப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களை சரிபார்க்கும் செயல்முறையை நாங்கள் தீவிரப் படுத்தியுள்ளோம். ஒரு ட்ரோன் எதிர்ப்புக் குழுவும் நிறுவப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வளையத்தை மீறும் எந்தவொரு பறக்கும் பொருளும் கண்காணிக்கப்படும்.  ராஜபாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 300 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. 50,000 சந்தேகத்திற்குரிய குற்றவாளிகள் குறித்த விபரங்கள் இந்த சாதனங்களில் இடம் பெற்றுள்ளன.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அணிவகுப்பை பார்வையிட 4,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools