Tamilசெய்திகள்

குடியரசு தின விழா – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றினார்

இந்திய திருநாட்டின் குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் இன்று கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் நடத்தி வருகிற தொடர் போராட்டம், டிராக்டர் பேரணி ஆகிய இரு பெரும் சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற வருகிறது.

குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக போர் நினைவுச்சின்னத்தில் நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதை வந்தார். அவரை முப்படை தளபதிகள் வரவேற்றனர். அவரைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ராஜபாதைக்கு வருகை தந்தார்.

அதைத் தொடர்ந்து ராஜபாதைக்கு குதிரைப்படை அணிவகுப்புடன் வருகை தந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். அவரை பிரதமர் மோடி வரவேற்றார். அதன்பின் முப்படை தளபதிகளை ஜனாதிபதிக்கு அறிமுப்படுத்தினார் பிரதமர் மோடி.

அதன்பின் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். அப்போது 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.