X

குடியரசு தின விழா – காமராஜர் சாலையில் இறுதிகட்ட ஒத்திகை நடைபெற்றது

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தினம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

இந்நிலையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவுக்கான இறுதிகட்ட ஒத்திகை இன்று நடைபெற்றது. குறிப்பாக முப்படை, தேசிய மாணவர் படை, காவல் துறை, தீயணைப்பு துறையும் அணிவகுப்பில் பங்கேற்றனர். கவர்னர், முதலமைச்சர் வருவதுபோலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போலவும் ஒத்திகை நடைபெற்றது. பள்ளி மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகையும் நடைபெற்றது.

குடியரசு தின விழாவையொட்டி நாடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள், வணிக வளாகங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை மாநகர் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: tamil news