நாட்டின் 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் தெலுங்கானா பவனில் இன்று காலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. இவ்விழாவில் தெலுங்கானா மாநில முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா முன்னாள் துணை முதல்வர் மஹ்மூத் அலி திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி சரிந்தார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் கைத்தாங்கலாக உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சார்பில் மஹ்மூத் போட்டியிட்டு முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்ததுடன், துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.