Tamilசெய்திகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 ஆம் தேதி டெல்லி மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மனிக்கு தொடங்குகிறது

இந்தியாவில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாநில சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.

இந்நிலையில், குடியரசு தின விழாவன்று டெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என காலை 6 மணி வரை ரெயில்கள் இயங்கும். காலை 6 மணிக்குப் பிறகு வழக்கமான அட்டவணையின் கீழ் செயல்படும் எனவும் எனவும் அறிவித்துள்ளது.