குடியரசு தலைவரின் சென்னை வருகையில் எந்த மாற்றமும் இல்லை – டிஜிபி அலுவலகம் அறிவிப்பு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8-வது பட்டமளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார்.

விழாவில் பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை வருநதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கு வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதன் எதிரொலியால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.  இந்நிலையில், குடியரசு தலைவரின் சென்னை வருகையில் தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை என டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news