X

குடிபோதையில் வெள்ள நீர் சூழ்ந்த சுரங்கப்பாதையில் இறங்கி ஒருவர் பலி

அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக குருகிராம் மாவட்டத்தில் உள்ள டெல்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்தள்ள சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கிய மழை நீரில் மூழ்கி போதை ஆசாமி உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம், நேற்று முன்தினம் மாலை வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதை வடிந்தபோது ஆசாமி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

உயிரிழந்த நபர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரிபேந்து எனவும், அவர் மானேசரியில் உள்ள ஐஎம்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

அரிபேந்து சனிக்கிழமை இரவு முழுவதும் மது அருந்திவிட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டை விட்டு வெளியேறியதாக இறந்தவரின் உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். குடும்ப உறுப்பினர்களால் புகார் ஏதும் அளிக்காததால் வழக்கப்பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: tamil news