டெல்லியின் டிராபிக் நிறைந்த மையூரி பகுதியின் அருகே இருந்த டிராபிக் போலீசார் நேற்று வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வருபவர்களை பிடிக்கும் பணியில் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அனில் பாண்டே எனும் நபர், மாதுரி என்பவருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மேட் அணியாமல் வந்துக் கொண்டிருந்தார். அவரை கண்டு டிராபிக் போலீஸ் ஒருவர் ஓரம் கட்டினார்.
அந்த பெண்ணும், உடனிருந்த நபரும் நன்றாக குடித்துவிட்டு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் இல்லாமல் தனியே அழைத்து விசாரிக்க முற்பட்டார்.
குடித்துவிட்டு போதையில் ஆவேசமாக இருந்த அந்த பெண், டிராபிக் போலீசிடம் மரியாதை குறைவாக நடந்துக் கொண்டார். போலீஸ், அவர் வந்த பைக்கின் சாவியினை எடுத்துக் கொண்டார். அந்த பெண், டிராபிக் போலீசின் கையை தன் கையால் தட்டிவிட்டு, சாவியை எடுத்துக் கொண்டார்.
பின்னர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீசினையும் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தினை அருகிலிருந்த அனைவரும் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இதையடுத்து அனில் பாண்டே, மாதுரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரையும் போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.