Tamilசெய்திகள்

குஜராத் மக்கள் சுய லாபத்துக்காக என்னை சந்தித்தது கிடையாது – பிரதமர் மோடி பேச்சு

குஜராத் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பிரதமர் மோடி அகமதாபாத் நகரில் நேற்று நடைபெற்ற மோடி கல்வி வளாக திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நான் இங்கு வந்த போது மக்கள் அளித்த வரவேற்புக்கும், வாழ்த்துக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். வளர்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லாத காலகட்டத்தில் தவித்து வந்த மக்கள் தற்போது சுயமுயற்சியில் முன்னேறி வருவது சிறப்பானதாகும்.

மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கல்விக்கென ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். அவர்களின் இந்த ஒருங்கிணைந்த முயற்சியின் வலிமை சிறப்பு மிக்கதாகும். அவர்களின் பாதை சரியானது. அதன் மூலம், அவர்கள் முன்னேற்றம் அடைவது உறுதி.

மக்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது பெருமைகுரியது. இந்த மண்ணின் மைந்தர் ஒருவர் குஜராத்தின் முதல்வராக நீண்ட காலமும், தற்போது நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையும் இருந்து வருகிறார்.அவருடைய நீண்ட ஆட்சிக் காலத்தில் இந்த பகுதியை சார்ந்த மக்கள் தங்களது சுய லாபத்துக்காக ஒருமுறை கூட அவரை சந்தித்தது கிடையாது. அவர்களுக்கு மனதார மரியாதை செலுத்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.