ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத் நகரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பிறகு குஜராத் அணியை வீழ்த்திய சந்தோசத்தை கொண்டாடும் விதமாக அஸ்வின்- சாம்சன் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின், ராஜஸ்தான் அணி வீரர்களுடன் “நீங்க மட்டும் தோத்தாலும் ஜெயிச்சாலும் விசில் போட்டு சந்தோஷமா இருக்கீங்க. தம்பி அடிச்ச அடியில குஜராத்தே குலுங்கிடுச்சு என்று அந்த அணியை கலாய்த்து உரையாடினார்கள்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.