விதவிதமான மோசடியை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சினாமாவை மிஞ்சிய வகையில் குஜராத் மாநிலத்தில் போலி சுங்கச்சவாடி அமைத்து கோடிக்கணக்கில் பணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் மொர்பி மாவட்டத்தில் கட்ச் பகுதியை இணைக்கும் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் வகசியாக சுங்கச்சவாடி உள்ளது. இந்த வாக்குச்சாவடிக்கு அருகில் உள்ள வர்கசியா கிராமத்தில் பீங்கான் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று மூடிய நிலையில் உள்ளது. இந்த தொழிற்சாலையை போலி சுங்கச்சாவடியாக மாற்ற சில மோசடி பேர்வழிகள் முடிவு செய்தனர்.
அதன்படி தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி போன்று போலியான சுங்கச்சாவடி அமைத்தனர். மேலும் நெடுஞ்சாலை அதிகாரிகள் கண்ணில் மண்ணைத்தூவி ஒரு துணைச்சாலை அமைத்தனர். இந்த சாலை வழியாக நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. வகசியா சுங்கச்சவாடியில் வசூல் செய்யும் பணத்தை விட 50 சதவீதம் குறைவாக வசூலித்துள்ளனர். இதனால் வாகனம் ஓட்டிகள், கனரக வாகன ஓட்டிகள் இதுகுறித்து அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை. தங்களுக்கு 50 சதவீதம் லாபம் கிடைப்பதால் அந்த வழியாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
சுமார் ஒன்றரை ஆண்டுகள் இந்த போலி சுங்கச்சாவடி செயல்பட்டு வந்துள்ளது. லட்சக்கணக்கானோரிடம் சுமார் 75 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. 110 ரூபாய் முதல் 595 ரூபாய் வரையிலான வரி வசூலுக்கு 20 ரூபாய் முதல் 200 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இறுதியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது போலி சுங்கச்சாவடி செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான அமர்ஷி பட்டேல், அவருடைய கூட்டாளிகள் வன்ராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவ்ராஜ் சிங் ஜாலா உள்ளிட்ட பலமர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத் மாநிலத்தில் கடந்த மாதம் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் ஆறு போலி அலுவலகங்களை நடத்தி வந்த மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.