X

குஜராத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது – 4 பேர் பலி

குஜராத்தின் நாதியாத் மாவட்டம், பிரகதிநகரில் இன்று அதிகாலையில் 3 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 4 பேரின் சடலங்களை மீட்டனர்.

மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.