கீவ் நகரில் ரஷ்யா படைகளை குறைப்பதாக அறிவித்தது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா கண்டனம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில், போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் ராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷியா தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்ப பெறப்படவில்லை. இடமாற்றம் தான் செய்யப்படுகிறது என பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும், கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷிய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools