Tamilசெய்திகள்

கீவ்வில் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தலாம் – உக்ரைன் எச்சரிக்கை

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து  5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் கீவ்வில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தப்போவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கும்படி ராணுவத்திற்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.