Tamilசென்னை 360

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி

1967 ஆம் ஆண்டு ஒரு மகளிர் கல்லூரி மாணவிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கிச் சுட்டெரித்த சாலைகளில் பேரணியாகச் சென்றனர். அதன் பின் பரபரப்பான பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்தை மறித்து தர்ணா செய்தனர்.

அவர்களது கோரிக்கையைக் கேட்டு சென்னை நகரமே திரும்பி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தது. ஏன் என்றால், ஆண் மாணவர்களையும் அவர்கள் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பதே அரசின் முன்வைக்கப்பட்ட அவர்களது கோரிக்கை. உலகில் எங்கும் கேள்விப்படாத நிகழ்வு இது. அது நடந்தது மெட்ராஸில்தான்; ஆனால் இந்தக் கதை தொலைதூர டெல்லியில் தொடங்கியது.

1911, இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்டது. இந்திய மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்ட ஆங்கிலேயர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவர் கவர்னர் ஜெனரலின் மனைவியாய் இருந்தது நாட்டுக்கு அதிர்ஷ்டம் தான்.

view more at kizhakkutoday.in