Tamilசெய்திகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் தொடர்பாக சட்டசபையில் இன்று விவாதம் நடைபெற்றது. கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அவர் கூறுகையில்,

* கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பயணிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அதிகாலையில் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள்.

* தென் மாவட்டங்களில் இருந்து வரும் மக்களை சென்னையின் உள்ளே இறக்கி விட வேண்டும் என்று கூறினார்.

இதற்கு அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

* கிளாம்பாக்கத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சியில் தான்.

* பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவந்தது திமுக அரசு.

* பேருந்தில் பயணம் செய்யும் மக்கள் யாரும் புகார் கூறவில்லை. பேருந்தில் பயணம் செய்யாதவர்கள் தான் புகார் கூறி வருகின்றனர்.

* அதிமுக ஆட்சியில் 30 சதவீத பணிகள் தான் நிறைவு பெற்றிருந்தது.

* கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்து எண்ணிக்கை குறைவு என்பது தவறான குற்றச்சாட்டு.

* வடசென்னை மக்களுக்காக மாதவரத்தில் இருந்து 20 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகிறது.

* கிளாம்பாக்கத்தில் தென்மாவட்டம் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் போதுமான பேருந்து வசதிகள் உள்ளன.

* கிளாம்பாக்கம் பேருந்து முனையம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

* செல்லூர் ராஜூ விரும்பினால் அவரை நேரடியாக அழைத்து செல்ல தயார் என்று அவர் கூறினார்.