ஜுர்கன் கிளோப் தலைமையில் லிவர்பூல் கால்பந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த வருடத்தில் லிவர்பூல் ஏற்கனவே யூரோ சாம்பியன்ஸ் லீக், யூரோ சூப்பர்கோப்பை ஆகியவற்றை கைப்பற்றிருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு நடைபெற்று கிளப் உலக கோப்பை இறுதிப் போட்டியில் பிளமெங்கோ அணியை எதிர்கொண்டது.
பிரேசில் நாட்டின் கால்பந்து கிளப் அணியான பிளமெங்கோவுக்கு எதிராக லிவர்பூல் வீரர்கள் கடுமையான போராடினார்கள். ஆட்டம் முடிவதற்கு முன் லிவர்பூல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்து. ஆனால், VAR right மூலம் பெனால்டி மறுக்கப்பட்டது.
இதனால் 90 நிமிட ஆட்டம் கோல்கள் ஏதுமின்றி முடிவடைந்தது. இதனால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. 99-வது நிமிடத்தில் லிவர்பூலின் ரொபேர்ட்டோ ஃபேர்மினோ கோல் அடிக்க லிவர்பூல் 1-0 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இதன்மூலம் இந்த வருடத்தில் மூன்று கோப்பைகளை கைப்பற்றி லிவர்பூல் சாதனைப் படைத்துள்ளது.