கில் உடனான் மோதல் குறித்து விளக்கம் அளித்த இங்கிலாந்து வீர ஆண்டர்சன்

இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நடந்த 4 போட்டிகளில் இந்த அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

112 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் போட்டியில் தோல்வியுற்றும் பின்னர் தொடரை (4-1) வென்ற ஒரே அணி என்ற வரலாற்று சாதனையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பெற்றது. இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் கில் மற்றும் ஆண்டர்சன், பேர்ஸ்டோவ் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து பல கருத்துக்கள் வெளியாகின.

இந்நிலையில் அந்த மோதலில் இதுதான் நடந்தது என இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய மண்ணை தவிர வெளிநாடுகளில் ஏதாவது ரன்கள் அடித்து இருக்கிறீர்களா என கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பதிலளித்தார். அடுத்த 2 பந்துகளில் அவரது விக்கெட்டை வீழ்த்தி விட்டேன்.

மேலும் குல்தீப் எனது ஓவரில் ஒரு ரன் எடுத்து எதிர் திசைக்கு ஓடி வந்தார். நானும் எனது அடுத்த பந்தை வீசுவதற்காக திரும்பி சென்று கொண்டிருந்தேன். அப்போது உங்களது 700-வது விக்கெட் நான் தான் என்று நினைக்கிறேன் எனவும் என் மனதில் அப்படிதான் தோன்றுகிறது எனவும் கூறினார். உடனே நாங்கள் இருவரும் கொண்டே நகர்ந்தோம்.

இவ்வாறு ஆண்டர்சன் கூறினார்.

இதனை தொடர்ந்து கில்லுடன் இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ் மோதலில் ஈடுப்பட்டார். கடைசி போட்டியில் 2-வது இன்னிங்சின் போது பேட்டிங் செய்ய வந்த பேர்ஸ்டோவ், கில்லிடம் ஆண்டசனை ஓய்வு எடுக்க கூறினாயா? அடுத்த 2 பந்தில் உன்னை விழ்த்தினார் பார்த்தாயா என கேட்டார். அதற்கு அதனால் என்ன சதம் அடித்த பிறகு தானே அவுட் செய்ய முடிந்தது என பதிலளித்தார். நீங்கள் இந்த தொடரில் எத்தனை சதம் அடித்தீர்கள் என கில் கேள்வி எழுப்பினார். அதற்கு நீ இதுவரை எத்தனை ரன்களை எடுத்திருக்கிறாய் பேச்சை நிறுத்து என கூறினார். அத்துடன் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools