X

கிரிக்கெட் வீர முகமது சமியின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் முகமது சமி இடம் பெற்றிருந்தது. ஆனால் காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் அவர் விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்தும் முகமது சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் சரியாக சில நாட்கள் ஆகும். விரைவில் சொந்த காலில் நிற்க ஆசைபடுவடுவதாகவும் சமி தெரிவித்தார்.
இதனால் அவர் ஐபிஎல் தொடரை இலக்க நேரிடும். மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் அவர் களமிறங்க வாய்ப்பு இருக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி முகமது சமி சாதனை படைத்தார்.