கிரிக்கெட் வீரர் லட்சுமன் எழுதிய சுயசரிதை புத்தகம் வெளியானது!
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் மோதிய டெஸ்ட் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது.
இந்த டெஸ்டில் ‘பாலோ’ ஆன் ஆகி கங்குலி தலைமையிலான இந்திய அணி 171 ரன் விததியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு வி.வி.எஸ். லட்சுமண் முக்கிய பங்கு வகித்தார். அவர் 631 நிமிடங்கள் களத்தில் நின்று 452 பந்துகளை சந்தித்து 281 ரன் (44 பவுண்டரி) குவித்தார்.
ராகுல் டிராவிட் 446 நிமிடம் களத்தில் நின்று 353 பற்துகளை சந்தித்து 180 ரன் (20 பவுண்டரி) எடுத்தார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 376 ரன் எடுத்து அணியை தோல்வியில் இருந்து தவிர்த்து வெற்றி பெற வைத்தனர்.
281 ரன் குவித்த இந்த டெஸ்ட் குறித்து லட்சுமண் சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகம் வெளியிட்டு விழா கொல்கத்தாவில் நடந்தது. இதில் முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, ஜாகீர்கான் பங்கேற்றனர்.
வி.வி.எஸ்.லட்சுமண் 2001-ம் ஆண்டு கொல்கத்தா டெஸ்டில் சிறப்பாக ஆடி இருக்காவிட்டால் நாங்கள் தொடரை இழந்து இருப்போம். எனது கேப்டன் பதவியும் பறிபோய் இருக்கும். லட்சுமண் 281 ரன் குவித்தது எனது கேப்டன் பதவியை காப்பாற்றினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
2001-ம் ஆண்டு நடந்த இந்த தொடரில் இந்திய அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்டில் தோற்றது. கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டிலும், சென்னையில் நடந்த 3-வது டெஸ்டிலும் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.